“தியேட்டர்ல 4 பேர் ” – இப்படியும் ஒரு டைட்டில்…

theaterla naalu per adநேற்றைய நாளிதழ்களில் வந்த ஒரு படத்தின் விளம்பரத்தைப் பார்த்த நமக்கு அதிர்ச்சி.

இரண்டு நாட்களுக்கு முன்தான் ‘ஜிகர்தண்டா’ இசை வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க கூடுதல் செயலாளர் ஸ்ரீதர் பேசும் போது தியேட்டருக்கு இப்பலாம் படம் பார்க்க 19, பேர் 32 பேர் வர்றாங்க என பேசியிருந்தார்.

பரீட்சை நேரம், தேர்தல் பிரச்சாரம் ஆகியவை பரபரப்பாக இருப்பதால், சில திரையங்குகளில் தற்போது யாருமே வராததால் இரவுக் காட்சிகளை ரத்து செய்து வருவதாகவும் நேற்று கேள்விப்பட்டோம்.

அப்படி ஒரு நிலைமை இருக்க, நேற்றைய நாளிதழ்களில் ‘தியேட்டர்ல 4 பேர்’ என்ற விளம்பரத்தைப் பார்த்ததும் அதிர்ச்சி வராமல் என்ன வரும். இது ஏதோ படத்திற்காக வைக்கப்பட்ட ‘கேப்ஷன்’ ஆக இருக்கலாமோ என நினைத்தால், அதுதான் படத்தின் டைட்டில் என்கிறார் தயாரிப்பாளர்.

இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் பி.டி.எஸ். ஞானேஸ்வரன் கூறியதாவது,

“இந்த படம் தெலுங்குல வெளிவந்த “தியேட்டர்ல நல்குரு’ என்ற படத்தின் மொழிமாற்றுப் படம். தியேட்டர்ல ரிலீசாகி ஒரு படம் ஓடிக்கிட்டிருக்கு. அந்த படத்துல என்ன நடக்குதோ அதே சம்பங்கள் படம் ஓடற தியேட்டர்லயும் நடக்குது. அதாவது, படத்துக்குள்ள படம்.

தெலுங்குல வச்ச பேரையே தமிழ்ல மாத்தி, ‘தியேட்டர்ல 4 பேர்’ னு தலைப்பா வச்சிட்டோம். ஒரு பரப்பான த்ரில்லர் படம், ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும், என்கிறார் தயாரிப்பாளர்.

ஸ்ரீனிவாச ராஜு இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிச்சிருக்கிற இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Read Previous

விஷாலை காதலிப்பது உண்மையா ? – லட்சுமி மேனன் பரபரப்புப் பேட்டி

Read Next

‘சைவம்’ – கோடையில் இன்னுமொரு குளிர்ச்சி…