இன்று 14 மார்ச் 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
ஒரு காதல் ஒரு மோதல்
கந்தன் கியர் அப் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் டி.ஜி. கீர்த்தி குமார இயக்கத்தில் கே.ஆர். கவின் இசையமைத்திருக்கும் படம். விவேக் ராஜகோபால், மேகா பர்மன், ரூபா நட்ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
காதல் சொல்ல ஆசை
எமர்சைன்ஸ் புரொடக்ஷன்ஸ் பி. லிட்., தயாரிப்பில் கே.எஸ். தமிழ் சீனு இயக்கத்தில் எம். லேகா இசையமைத்திருக்கிறார். அசோக், மது ரகுராம், வாஷ்னா அஹமத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆதியும் அந்தமும்
என்கே கிராப்ட் பி. லிட் , ஆர்எஸ்ஆர் தயாரிக்க கௌஷிக் இயக்கத்தில் எல்.வி. கணேசன் இசையமைத்திருக்கும் படம். அஜய், மிட்டாலி அகர்வால், கவிதா ஸ்ரீனிவாஸ் மற்றும் பலர் நடித்துள்ள படம்.
மறுமுகம்
என்டர்டெய்ன்மென்ட் அன்லிமிட்டட் தயாரிப்பில் கமல் சுப்ரமணியம் இயக்கத்தில் அகஸ்தியா இசையமைப்பில் டேனியல் பாலாஜி, அனூப், ப்ரீத்தி தாஸ், பானுசந்தர் மற்றும் பலர் நடித்துள்ள படம்.
வங்கக்கரை
நாகை பிலிம்ஸ் தயாரிப்பில் கே.டி.முருகன் இயக்கத்தில் அன்பரசு இசையமைப்பில் ஜோதிஷா, ஷினு, ‘காதல்’ சுகுமார், ‘உடுமலை’ ரவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆயிரத்தில் ஒருவன்
எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்து 1965ம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றிப் படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் ‘ரெஸ்டோரேஷன், டிஐ, டிடிஎஸ் 5.1’ என நவீன தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு இன்று வெளியாகிறது. பி.ஆர். பந்துலு இயக்கத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருக்கிறார்கள்.





