ரஜினிகாந்த் பாராட்டிய ‘நான் சிகப்பு மனிதன்’

naan sigappu manithan rajinikanth

யு டிவி மோஷன் பிக்சர்ஸ், விஷால் பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் இசையை ரஜினிகாந்த் வெளியிட்டதோடு, படத்தைப் பற்றி மிகவும் பாராட்டி பேசியிருக்கிறார்.

நேற்று சென்னை, சத்யம் திரையரங்கில் இப்படத்தின் இசை விழா நடைபெறுவதற்கு முந்தின நாளே ரஜினிகாந்தை படக் குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவரே படத்தின் இசையையும் வெளியிட்டு, படத்தையும், படக்குழுவினயும் வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் டீஸரையும், பாடல்களையும் அவருக்கு திரைப்படக் குழுவினர் போட்டுக் காட்டினர். அதன் பிறகு ரஜினி தெரிவித்ததாவது,

“நார்க்கோலெப்ஸி’ என்ற அடிக்கடி தூங்கி விழும் நோய் கொண்ட ஒரு இளைஞனைப் பற்றிய இப்படத்தின் கதை மிகவும் வித்தியாசமாக உள்ளது.

விஷால் புதுப் புது கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். பல புது இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்கிறார் என விஷாலை உச்சி குளிர வைத்தார்.

லட்சுமி மேனன் தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடிப்பதிலும், இந்த படத்தில் ‘இதயம் உன்னை…’ பாடலில் அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது.

படத்தில் ஜி.வி.பிரகாஷின் இசை, ரிச்சர்ட்டின் ஒளிப்பதிவினையும் பாராட்டினார்.

டிஸ்னி இந்தியாவின் தொழில் முறையும், நேர்த்தியான ஒருங்கிணைப்பும் அருமையாக உள்ளது, ” என அனைவரையும் பாராட்டி படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

Read Previous

இன்றைய ரிலீஸ் – 5 படங்கள்

Read Next

ஒரு மோதல் ஒரு காதல் – விமர்சனம்