செய்தியைப் பற்றி கேள்விப்படும் போது ஆச்சரியமாகவும், மலைப்பாகவும்தான் இருக்கிறது.
தமிழ் இயக்குனர்களிலேயே அதிகப்படியான சம்பளம் வாங்கும் இயக்குனர் என்று ஏ.ஆர்.முருகதாஸைத்தான் கை காட்டுகிறார்கள்.
ஹிந்திக்குச் சென்று அமீர் கான்‘கஜினி’ படத்தை 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்த இயக்குனர் என்பதால், ஹிந்தியில் அவருக்கு அதிகப்படியான அழைப்புகள் வந்தாலும், அதையெல்லாம் தவிர்த்து, தமிழில் சூர்யா நடித்த ‘7ம் அறிவு’ , விஜய் நடித்த ‘துப்பாக்கி’ ஆகிய படங்களை இயக்கியதுடன், ‘எங்கேயும் எப்போதும்’ போன்ற நல்ல படங்களையும் தயாரித்தார், தற்போதும் சில படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
அதோடு, ஹிந்தியில் அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் ‘ஹாலிடே’ (துப்பாக்கி ரீமேக்) படத்தையும், விஜய் நடிப்பில் பெயரிடப்படாத தமிழ்ப் படம் ஒன்றையும் இயக்கி வருகிறார்.
விஜய் நடிக்கும் தமிழ்ப் படத்திற்குத்தான் பட்ஜெட் 100 கோடி என கோடம்பாக்கத்தில் ஆச்சரியத்தோடு பேசிக் கொள்கிறார்கள்.
விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இருவரின் சம்பளம் மட்டுமே சுமார் 50 கோடி ரூபாயாம். அது மட்டுமல்லாமல் படத்தின் தயாரிப்பை மிகவும் பிரம்மாணடமாக 50 கோடி ரூபாய் செலவில் உருவாக்கி வருகிறார்களாம்.
அப்படிப் பார்க்கப் போனால், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த ‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு அதிக பொருட் செலவில் உருவாகும் படமாக இந்த படம் இருக்கும் என்கிறார்கள்.
செலவே அவ்வளவு என்றால் அப்ப வசூல் ?