ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, நாசர், ஷோபனா மற்றும் பலர் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கியுள்ள ‘கோச்சடையான்’ திரைப்படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இன்று இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். குழந்தைகள் முதல் அனைவரும் ரசிக்கும்படியான படமாக உருவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முதல் சலனப் பதிவு தொழில்நுட்பம் (Motion Capturing Technique) முறையில் படமாக்கப்பட்டுள்ள ‘கோச்சடையான்’ படம் பற்றிய எதிர்பார்ப்பு வெகு நாட்களாகவே இருந்து வருகிறது.
படத்தின் பாடல்கள் வெளியான பிறகு அது இன்னமும் அதிகரித்துள்ளது.
படத்தின் சரியான வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளார்கள்