அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் ‘ஈட்டி’…

eetti tamil movie

இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளரான ரவி அரசு இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘ஈட்டி’.

இந்த படத்தில் நாயகனாக அதர்வா, நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயப்பிரகாஷ், நரேன், முருகதாஸ், ‘கும்கி’ அஸ்வின், சோனியா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தை குளோபல் இன்ஃபோடெய்ன்மென்ட் சார்பாக மைக்கேல் ராயப்பன், கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பாக வெற்றிமாறன் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைப்பில் நான்கு பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களாக இவை அமையும் என்கிறார் இசையமைப்பாளர் ஜிவி.

இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது.

Read Previous

பாலா, இளையராஜா,சசிகுமார் இணையும் ‘தாரை தப்பட்டை’

Read Next

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் பட செலவு 100 கோடி ?