திருமண அறிவிப்பால் படங்களை இழக்கும் அமலா பால்…

amala paul director vijayஅமலா பால் – இயக்குனர் விஜய் இருவரும் அவர்களது காதலைப் பற்றிய அறிவிப்பைத்தான் முறையாக வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆனால், அதிகாரபூர்வமாக அவர்களது திருமணம் எப்போது நடக்கப் போகிறது என அவர்களாக இதுவரை அறிவிக்கவில்லை. மீடியாக்கள்தான் ஜுன் 12ம் தேதி திருமணம் என எழுதி வருகின்றன.

இந்த நிலையில் அமலா பால் நடிக்கவிருந்த படங்களின் நிலை தற்போது தடுமாற்றத்தை சந்தித்துள்ளது.

அதிலும், அமலா பாலை நாயகியாக புக் செய்து வெளிநாட்டிற்கு படப்பிடிப்புக்காகச் செல்லவிருந்த ‘வஸ்தா நீ வேணுகா’ தெலுங்குப் படக் குழுவினர் அவர்களது படப்பிடிப்பு திட்டத்தையே ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்தான் அந்தப் படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் அமலா பால் கையெழுத்திட்டிருக்கிறார். அப்படத்தில் நடிப்பதற்காக அமலா பாலுக்கு பெரும் தொகை பேசப்பட்டு அட்வான்சும் கொடுக்கப்பட்டதாம்.

அதன் பின்தான் அவருடைய திருமணச் செய்தி மீடியாக்களில் வெளிவந்தது. அவரது திருமணம் பற்றிய எந்த தகவலையும் சம்பந்தப்பட்ட பட நிறுவனத்துக்கோ, இயக்குனரான ரமேஷ் வர்மாவுக்கோ அமலா பால் தெரிவிக்கவில்லையாம்.

அதனால், கடுப்பாகிப் போன படக் குழு அந்த படத்திலிருந்து அவரை நீக்கி விட்டு, இப்போது வேறு ஹீரோயினை தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.

தமிழிலும், சமுத்திரக்கனி இயக்கத்தில் அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்த படத்தின் நிலையும் தற்போது சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது.

அமலா பால் நடிக்க உள்ள மற்ற படங்களைப் பற்றிய நிலை என்ன என்பதைப் பற்றிய செய்திகள் இனிமேல்தான் வெளி வரும்…

Read Previous

கே.எஸ்.ரவிகுமார் – ரஜினி மீண்டும் இணையும் ‘லிங்கா’

Read Next

அப்பாடா…‘அஞ்சான்’ டைட்டிலை காட்டிட்டாங்க…