கே.எஸ்.ரவிகுமார் – ரஜினி மீண்டும் இணையும் ‘லிங்கா’

rajinikanth lingaa

ரஜினிகாந்த் – கே.எஸ். ரவிகுமார் மீண்டும் இணையும் புதிய படத்திற்கு ‘லிங்கா’ என பெயரிட்டிருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் பேரனும், தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியரின் மகன் பெயர் லிங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

‘முத்து, படையப்பா’ ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களுக்குப் பிறகு ரஜினி – ரவிகுமார் கூட்டணி பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள்.

இந்த படத்தில் ரஜினி ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்கா ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

ஒரு ரசிகர் உருவாக்கியதைப் போன்ற மிகச் சாதாரணமான டிசைன் ஒன்றை இதற்காக இன்று வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்கா ஆகியோரின் படங்களும் மிகவும் பழைய புகைப்படங்களாகவே தெரிகிறது.

தற்போதெல்லாம் ஒரு படத்தின் முதல் பார்வை, டைட்டில் டிசைன் என பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, விளம்பரப்படுத்தி வரும் சூழ்நிலையில் ‘லிங்கா’ படத்தைப் பற்றிய அறிவிப்பு இவ்வளவு சாதாரணமாகவும், எளிமையாகவும் இருப்பதன் காரணம் தெரியவில்லை.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.

 

Read Previous

சுதந்திரத்தின் பலனை அனுபவிப்பது யார் ? – சகாயம் ஐ.ஏ.எஸ் கேள்வி

Read Next

திருமண அறிவிப்பால் படங்களை இழக்கும் அமலா பால்…

Most Popular