இன்று மே 2, 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
எப்போதும் வென்றான்
ஏஆர்ஆர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சிவசண்முகன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள படம். சஞ்சய், சுனு லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம்.
நீ என் உயிரே
ஸ்ரீ லட்சுமி விருஷாத்ரி புரொடக்ஷசன்ஸ் தயாரிப்பில் விகாஷ் லலித்ராஜா இயக்கத்தில், விஜய் மந்தாரா இசையைமப்பில், நவரசன், வைஷாலி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இன்று இந்த இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது.
நேற்று, மே 1 , விடுமுறை தினம் என்பதால் 3 படங்கள் வெளியாகியுள்ளன. ஆக, இந்த வாரம் மொத்தம் 5 படங்கள் வெளியாகியுள்ளன.
நீ எங்கே என் அன்பே
வியாகாம் 18 தயாரிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் மரகதமணி இசையமைப்பில் நயன்தாரா, வைபவ், பசுபதி மற்றும் பலர் நடித்துள்ள படம்.
தாவணிக் காற்று
ஸ்டுடியோ சந்தோஷ் தயாரிப்பில் வி.ஆர்.பி.மனோகர் இயக்கத்தில் உதயன் இசையமைப்பில், தமிழ், ஆராத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஆதி தப்பு
கருணா பிலிம்ஸ் தயாரிப்பில் சி.கே.கருணாநிதி இயக்கத்தில், ஜீவன் மயில் இசையமப்பில், சந்தோஷ்குமார், யுகவர்த்தினி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.




