கன்னடத்துக்குப் போன சரத்குமார் மகள் வரலட்சுமி…

varalaxmi_00005நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி , சிம்பு ஜோடியாக ‘போடா போடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அவர் அடுத்து விஷால் ஜோடியாக நடித்த ‘மதகஜ ராஜா’ பைனான்ஸ் பிரச்சனையால் படம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் வெளிவராமலே இருக்கிறது.

இதையடுத்து கன்னட மொழிப்பக்கம் போனார். அங்கு ‘நான் ஈ’ புகழ் சுதீப் ஜோடியா ‘மானிக்யா’ என்ற கன்னடப் படத்தில் அறிமுகமானார்.

இந்த படம் மே 1ம் தேதி வெளியானது. கன்னடத் திரையுலகில் அதிக பொருட்செவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது படம் என்ற பெருமையைப் பெற்ற இந்த படம் கர்நாடகாவில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே 14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம்.

தெலுங்கில் பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ‘மிர்ச்சி’ படத்தின் ரீமேக்காக உருவான படம்தான்  ‘மானிக்யா’.

அறிமுகப் படத்திலேயே வரலட்சுமிக்கு நல்ல பெயர் கிடைத்துவிட்டதால், மேலும் சில கன்னடப் படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம்.

வரலட்சுமி…தமிழ்ப் பக்கம் ‘வராத லட்சுமியா’ போயிடாதீங்க…

 

Read Previous

சரத்குமார் நடிக்கும் ‘சண்டமாருதம்’…

Read Next

மே 9-ல் ‘யாமிருக்க பயமே’ ரிலீஸ்…