மே 9-ல் ‘யாமிருக்க பயமே’ ரிலீஸ்…

Yamirukka Bayamey_00005ஆர்எஸ் இன்ஃபேடெயின்மென்ட் தயாரிப்பில் டீகே இயக்கத்தில் பிரசாத் இசையமைப்பில்  கிருஷ்ணா, கருணாகரன், ரூபா மஞ்சரி, ஓவியா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘யாமிருக்க பயமே.’

“யாம் இருக்க பயமேன்’ என்பது இதுவரை தைரியமூட்ட சொல்லப்பட்ட வாக்கியம் ஆகும்.  இந்த வாக்கியத்துக்கு எதிர் மறையான   கருத்தைக் கொண்ட படம்தான் ‘யாமிருக்க பயமே’.

திகில் படங்களைப் பார்த்திருக்கிறோம், விலா  நோக சிரிக்க வைக்கும் நகைச்சுவைப்  படங்களைப் பார்த்திருக்கிறோம். இந்தப் படம்  நகைச்சுவை கலந்த ஒரு திகில் படம்.

‘கழுகு’ கிருஷ்ணா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து  உள்ளார்.  அவருக்கு ஜோடியாக ரூபா மஞ்சரி நடிக்க, ஓவியா மற்றும் ஆதவ் கண்ணதாசன்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.  ‘சூது கவ்வும்’  கருணா இந்த படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .

16 தொழில் நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள்.

இப்படம் மே 9ம் தேதி வெளியாகும் என இன்று தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

 

Read Previous

கன்னடத்துக்குப் போன சரத்குமார் மகள் வரலட்சுமி…

Read Next

‘கோச்சடையான்’ ரிலீஸ் தள்ளிப் போக என்ன காரணம் ?

Most Popular