சிம்புவும் படங்களில் நடித்துக் கொண்டுதானிருக்கிறார், ஆனால், ஒரு படமும் வர மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறது என கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
கடந்த சில வருடங்களாக சிம்பு நடிக்கும் 3 படங்களின் படப்பிடிப்பு மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த கட்டத்துக்கு அவை போகாமல் அப்படியே இருக்கிறது.
இதனிடையே சிம்புவும், செல்வராகவனும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றப் போவதாகவும், அந்த படத்திற்கு செல்வாவை விட்டுப் பிரிந்த யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் இசையமைக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.
தற்போது ‘வாய் மூடி பேசவும்’ படத்தை தயாரித்து வெளியிட்டுள்ள ரேடியன்ஸ் மீடியாதான் அந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் பேச்சுகள் வந்தன.
ஆனால், சமீபத்தில் ஒரு பேட்டியில் ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்தின் வருண் மணியன், “செல்வராகவன் , ‘இரண்டாம் உலகம்’ படத்தை இயக்கியதால் அவருக்கும் அந்த படத்தைத் தயாரித்த பிவிபி நிறுவனத்துக்கும் ஏதோ பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அவற்றை அவர் சரி செய்து விட்டால், அவர் இயக்கும் புதிய படத்தை உடனே தயாரிக்கலாம்,” எனக் கூறியுள்ளார்.
செல்வாவின் அடுத்த படம், அவரது முடிவில்தான் உள்ளது.