‘பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமான சித்தார்த் தற்போதுதான் தமிழில் அதிகப் படங்களில் நடித்து வருகிறார்.
இவரைப் பற்றி எப்போதுமே ஏதாவது, கிசுகிசுவும், வம்பான செய்திகளும் வந்த வண்ணம் உள்ளது. சமீப காலமாக இவரையும் சமந்தாவையும் பற்றித்தான் மீடியாக்கள் அதிகம் பேசி வருகின்றன.
‘தீயா வேலை செய்யணும் குமாரு’ நாயகனைப் பற்றிக் கொஞ்ச நாட்களாக அடங்கியிருந்த அந்த ‘வதந்..தீ’ மீண்டும் பரவ ஆரம்பித்தது.
இதனால் எரிச்சலைடைந்த சித்தார்த், அவருடைய வருத்தத்தை கொஞ்சம் கடுமையாகவே வெளிப்படுத்தியுள்ளார்.
“என்னைப் பற்றியும், எனது குடும்பத்தைப் பற்றியும் சில நாட்களாகவே அடிக்கடி ஏதாவது செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அது என்னை மிகவும் பாதித்துள்ளது. அது ஒரு பொறுப்பற்ற செயல் என்று என்னை கவலையடைய வைத்துள்ளது.
10 வருடங்களுக்கு முன்பே என்னைப் பற்றி எழுதப்பட்ட ஒரு வதந்தி இன்று வரை மக்கள் எனக்கு டீன் ஏஜில் குழந்தைகள் இருப்பதாக நம்ப வைத்துள்ளது. ஒரு பொறுப்பற்ற செய்தி எவ்வளவு நாட்களாக இருந்து வருகிறது.
எனக்கு இப்போது 35 வயதாகிறது. முன்பை விட இப்போது கடினமாக உழைக்கிறேன். நான் வாழ்க்கையில் செட்டிலாகும் போது கண்டிப்பாக அதை அனைவருக்கும் சொல்கிறேன். அதுவரை அமைதியாக இருங்கள்..ப்ளீஸ், ” என கேட்டுக் கொண்டுள்ளார் சித்தார்த்.
சித்தார்த்தின் இந்த சீற்றத்துக்கு யார் காரணம் ?