பரீட்சை அப்புறம்…பட விழா…முக்கியம்…

kadal thulasi_00014‘யான்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இரு தினங்களுக்கு முன் சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. அதற்கு முந்தின நாள் வேறொரு நட்சத்திர ஓட்டலில் ‘கூகுள் – ஹேங் அவுட்’ மூலம் திரையுலக் பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொள்ள அப்படத்தின் நாயகியான துளசியை தயாரிப்பாளர் அழைக்கவேயில்லையாம்.

காரணம் துளசி தற்போது 11வது வகுப்பு படித்து வருகிறாராம். அவருக்கு மும்பையில் படிக்கும் பள்ளிக் கூடத்தில் பரீட்சை நடந்து வருவதை கவனத்தில் கொண்ட தயாரிப்பாளர் எல்ரெட் குமார், மேற்படி நிகழ்ச்சிகளுக்கு துளசிக்கு அழைப்பே விடுக்கவில்லையாம்.

ஆனால், இப்படி நிகழ்ச்சிகள் இருப்பதை அறிந்த துளசியின் அம்மாவும் 80களின் முன்னணி நடிகையுமான ராதா, தயாரிப்பாளரிடம் கோபித்துக் கொண்டுள்ளார்.

இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது முக்கியம். படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் நடிப்பு என்பதும் தொழில்தான். அதில் பக்தியுடன் இருக்க வேண்டும். கண்டிப்பாக துளசி அந்த நிகழ்ச்சிகளுக்கு வருவாள் எனச் சொல்லி  துளசியை அனுப்பி வைத்திருக்கிறார்.

இதைப் பற்றி பத்திரிகையாளர் சந்திப்பிலே சொன்னதே தயாரிப்பாளர் எல்ரெட் குமார்தான்.

இப்போது தெரிகிறதா, நடிகை ராதா ஏன் முன்னணி நடிகையாக இருந்தார் என்று…அந்த அளவிற்கு நடிப்பை நேசித்திருக்கிறார்…

 

Read Previous

தன்னைப் பற்றிய வதந்தி – சித்தார்த் எரிச்சல்…

Read Next

‘8 எம்.எம்’ – ஒரு பயணக் கதை…