பாலா தயாரிப்பில் சற்குணம், அதர்வா…

director bala and atharvaஇயக்குனர் பாலா அவரது பி ஸ்டுடியோஸ் மூலம் தொடர்ந்து படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன் மிஷ்கின் இயக்கத்தில், பாலா தயாரிக்கும் ‘பிசாசு’ படத்தின் பூஜை நடைபெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து பாலா அடுத்து தயாரிக்கவிருக்கும் படத்தை ‘நய்யாண்டி’ படத்தை இயக்கிய சற்குணம் இயக்குகிறார். பாலாவின் ‘பரதேசி’ படத்தில் கதாநாயகனாக நடித்த அதர்வா இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள், நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜுலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

 

Read Previous

நகரி தொகுதியில் நடிகை ரோஜா வெற்றி…

Read Next

நேற்று வெளியான ஒரே தமிழ்ப் படம்…