2014ம் ஆண்டு ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இடைவெளி இல்லாமல் ஏதாவது ஒரு படம் வெளிவந்து கொண்டேயிருக்கிறது.
அந்த விதத்தில் நேற்று எந்த படமும் வெளியாகவில்லை என சில இணையதளங்களும், ட்விட்டரில் தங்களைப் பெரிய சினிமா பத்திரிகையாளர்களாக சித்தரிப்பவர்களும் செய்திகளை வெளியிட்டிருந்தார்கள்.
ஆனால், நேற்று ‘என் நெஞ்சை தொட்டாயே’ என்ற தமிழ்ப் படம் வெளியாகியுள்ளது.
குரு சூர்யா மூவீஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஆர்.கே.அன்புச்செல்வன் இயக்கி உள்ளார். நாகா – ஜீவன்மயில் இசையமைத்துள்ளார்கள்.
இந்த படத்தில் புதுமுகங்கள் ரவிக்குமார், பவித்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் தேர்தல் ஜுரத்திலும் நேற்று வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.