ஜேஎஸ்கே வெளியிடும் 3 படங்கள்…

 

jsk-releases

 

பல தரமான வெற்றிப் படங்களை வெளியிடும் நிறுவனமான ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ஒரே நாளில் 3 படங்களை வெளியிட உள்ளது.

‘சிவப்பு எனக்கு பிடிக்கும், ஆள், மேகா’ ஆகிய படங்களை அந்நிறுவனம் ஜுன் மாதம் 13ம் தேதியன்று வெளியிடுகிறது.

‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ படத்தை யுரேகா இயக்க சிவசரவணன் – அனிஷ் யுவானி இசையமைக்கின்றனர். சான்ட்ரா எமி, யுரேகா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

‘ஆள்’ படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்க ஜோஹன் இசையமைக்கிறார். விதார்த், ஹார்த்திகா ஷெட்டி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

‘மேகா’ படத்தை கார்த்திக் ரிஷி இயக்க இளையராஜா இசையமைக்கிறார். அஷ்வின், சிருஷ்டி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில் ஒரே நாளில் ஒரே நிறுவனம் மூன்று படங்களை வெளியிடுவது சாதாரண விஷயமல்ல. ஆனால், அந்த தைரியத்தை ஜேஎஸ்கே நிறுவனம் எடுத்திருப்பதை திரையுலகமே வியந்து பார்க்கிறது.

 

Read Previous

கோச்சடையான் – சென்னையில் மட்டும் ஒரே நாளில் 300 காட்சிகள்…

Read Next

மணிரத்தினத்தை அவமானப்படுத்தினாரா மகேஷ் பாபு ?