மணிரத்தினத்தை அவமானப்படுத்தினாரா மகேஷ் பாபு ?

maniratnam-and-mahesh-babuகடந்த சில நாட்களாக மணிரத்னம் பற்றிய செய்திதான் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

‘கடல்’ படத்தின் மாபெரும் தோல்விக்குப் பிறகு நாகார்ஜுனா, மகேஷ் பாபு, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் மணிரத்னம் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன.

ஆனால், சில நாட்களுக்கு முன் மகேஷ் பாபு அந்த படத்தில் நடிப்பதற்காக கேட்ட தொகை மிக அதிகமாக இருந்ததால் மணிரத்னம் தரப்பு அதற்கு சம்மதிக்கவில்லை என்றும், அதனால் மகேஷ் பாபு அந்த படத்திலிருந்து விலகி விட்டார் என்றும் தெரிகிறது.

இந்தியாவில் உள்ள நடிகர்கள் அனைவருமே மணிரத்னம் படத்தில் நடிக்க காத்துக் கொண்டிருக்கும் போது மகேஷ் பாபுவின், இந்த சம்பள விவகாரம், மணிரத்னம் தரப்பை வெகுவாக பாதித்திருப்பதாகத் தெரிகிறது.

அதனால், அவருக்குப் பதிலாக சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் தேஜாவை நடிக்க வைக்க, சிரஞ்சீவியுடன் மணிரத்னம் ஐதராபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

சிரஞ்சீவியும் அதற்கு சம்மதித்துள்ளதாகவும், ராம் சரணை எப்படியெல்லாம் முன்னிலைப்படுத்த முடியும் என்று பேசியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதோடு, நாகார்ஜுனாவும் இந்த படத்திலிருந்து விலகியதால் அவருக்குப் பதிலாக வேறொருவரை நடிக்க வைக்கும் முயற்சியில் மணிரத்னம் இறங்கியிருக்கிறார்.

ஒரு தோல்வி ஒரு இயக்குனரை எப்படியெல்லாம் பாதிக்க வைக்கிறது….

 

Read Previous

ஜேஎஸ்கே வெளியிடும் 3 படங்கள்…

Read Next

சிவகார்த்திகேயனுடன் பிரச்சனையா ? சந்தானம் சறுக்கலான பதில்…