கோச்சடையான் – சென்னையில் மட்டும் ஒரே நாளில் 300 காட்சிகள்…

kochadaiyaan 1903ஈராஸ் இன்டர்நேஷனல் வழங்க மீடியா ஒன் குளோபல் தயாரிப்பில் நாளை மறுநாள் 23ம் தேதியன்று வெளியாக உள்ள ‘கோச்சடையான்’ திரைப்படம் சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மல்டிபிளக்ஸ் எனப்படும் திரையரங்குகளான பீனிக்ஸ் மால் லக்ஸ் வளாகத்தில் 5 திரையரங்குகள், சத்யம் எஸ்கேப் வளாகத்தில் 3 திரையரங்குகள், சத்யம் வளாகத்தில் 3 திரையரங்குகள், ஐனாக்ஸ் வளாகத்தில் 3 திரையரங்குகள், அபிராமி வளாகத்தில் 4 திரையரங்குகள், பிவிஆர் வளாகத்தில் 3 திரையரங்குகள், எஸ் 2 பெரம்பூர் வளாகத்தில் 3 திரையரங்குகள், வில்லிவாக்கம் ஏஜிஎஸ் வளாகத்தில் 4 திரையரங்குகள், ஓஎம்ஆர் ஏஜிஎஸ் வளாகத்தில் 3 திரையரங்குகள், உதயம் வளாகத்தில் 3 திரையரங்குகள், எஸ் 2 தியாகராஜா வளாகத்தில் 2 திரையரங்குகள், தேவி வளாகத்தில் 2 திரையரங்குகள், உட்லண்ட்ஸ் வளாகத்தில் 2 திரையரங்குகள் என பல திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னை சுற்றுப்புறங்களிலும் எண்ணற்ற திரையரங்குகளில் வெளியாகிறது.

அதுமட்டுமின்றி அதிக திரையரங்குகளைக் கொண்ட மாயாஜால் வளாகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளில் ‘கோச்சடையான்’ படம் மட்டுமே வெளியாகிறது. இப்படி சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் சேர்த்தால், ஆக மொத்தம் ஒரே நாளில் 300 காட்சிகள் அளவில் இப்படம் வெளியாவது மிகப் பெரிய சாதனை என திரையுலகினரால் பேசப்பட்டு வருகிறது.

இதுவரை எந்த ஒரு தமிழ்த் திரைப்படமும் புரியாத ஒரு சாதனையை கோச்சடையான் நிகழ்த்தியுள்ளது. இந்த திரையரங்குகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கோச்சடையான்’ 3டி மற்றும் 2டி தொழில்நுட்பங்களில் உலகம் முழுவதும் 23ம் தேதியன்று வெளியாகிறது.

 

 

Read Previous

பேய் படம்னாலே வீட்டை சுத்திதான் கதை நகரும் – சுந்தர் .சி

Read Next

ஜேஎஸ்கே வெளியிடும் 3 படங்கள்…