சிவகார்த்திகேயனுடன் பிரச்சனையா ? சந்தானம் சறுக்கலான பதில்…

sivakarthikeyan-and-santhanam

தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்து சாதித்தவர்கள் என பார்த்தால் இந்திய அளவில்  ஷாரூக் கானுக்குத்தான் முதலிடம்.

தமிழக அளவில் பார்த்தால் சிவகார்த்திகேயன், சந்தானம் முக்கியமானவர்கள். சமீப காலமாக இவர்கள் இருவரும் தமிழ்த் திரையுலகை ஆட்டிப் படைத்து வருகிறார்கள் என்று தாராளமாகச் சொல்லலாம்.

கடந்த சில வருடங்களாகவே சந்தானம் தனது  நகைச்சுவை நடிப்பால் நகைச்சுவை நடிகர்களில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். அவர் இல்லாத படமே இல்லை என்று சொல்லுமளவிற்கு பல படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு அதிக வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி வசூல் நாயகனாக விளங்கியவர் சிவகார்த்திகேயன்.

இவர்களிருவருமே விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்கள். இவர்களிருவக்கும் இடையே சண்டை, சச்சரவு இருப்பதாகவும், இருவரும் பேசிக் கொள்வதில்லை எனவும் நீண்ட நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இது பற்றி நேற்று நடந்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ சக்சஸ் மீட்டில் சந்தானத்திடம் கேட்ட போது அவர் மழுப்பலான, சறுக்கலான பதில் ஒன்றையே தந்தார்.

“எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. யாருடைய இடத்தை யாரும் நிரப்ப முடியாது. கமல் சார் ஒரு முறை சொன்னாரு, சினிமாங்கறது ஒரு காடு மாதிரி. அதுல எல்லா விதமான மிருகங்களும் இருக்கு.  அது அது அவங்க வேலை செஞ்சிட்டிருக்கும். நான் என் வேலையை பண்ணிக்கிட்டிருக்கேன்,” என்றார்.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக ஜெயிச்சதை மனதில் வைத்தே சந்தானமும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் ஹீரோவாக நடித்தார் எனவும் சொல்கிறார்கள். மேலும், சிவகார்த்திகேயனுக்கு முன்பாகவே சந்தானம் திரையுலகில் நுழைந்தாலும், அவருக்கு பின்னாடி வந்த சிவகார்த்திகேயன் ஹீரோவாக வெற்றி பெற்றதை சந்தானம் லேசில் எடுத்துக் கொள்ளவில்லையாம்.

விஜய் டிவியில் இருந்த காலத்திலேயே இருவருக்கும் அவ்வளவு ராசி என்றும் சொல்கிறார்கள்…

நடத்துங்க…நடத்துங்க…

 

Read Previous

மணிரத்தினத்தை அவமானப்படுத்தினாரா மகேஷ் பாபு ?

Read Next

‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ – ஹாலிவுட் பட அனுபவம் கிடைக்கும்…