‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ – ஹாலிவுட் பட அனுபவம் கிடைக்கும்…

tamilukku en ondrai aluthavumவிஎல்எஸ் ராக் சினிமா சார்பாக வி. சந்திரன் தயாரிக்கும் படம் ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’.

‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றிய, பல விளம்பரப் படங்களை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தமன் இசையமைக்கிறார்.

நகுல், ‘அட்டகத்தி’ தினேஷ், பிந்து மாதவி, புதுமுகம் ஐஸ்வர்யா, ‘எதிர் நீச்சல்’ சதீஷ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

படத்தோட தலைப்பே வித்தியாசமா இருக்கே, படமும் வித்தியாசமா இருக்குமா என இயக்குனரிடம் கேட்ட போது,

“ஒரு படத்துக்கு முதல்ல ஒரு அட்ராக்ஷன் தேவைப்படும். அது, ஹீரோ மூலமாவோ இல்லை ஹீரோயின் மூலமாவோ கூட இருக்கலாம். ஆனால், நாங்க படத்தோட தலைப்புலயே ஒரு அட்ராக்ஷன் இருக்கணும்னு நினைச்சோம்.

அது மட்டுமில்லாம, படத்தோட கதைக்கும் பொருத்தமா இருக்கிற மாதிரி இந்த டைட்டிலை தேர்ந்தெடுத்தோம்.

பூமியை நோக்கி வரும் காந்த புயலால் தகவல் தொழில் நுட்பம் முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. அதுல படத்தோட ஒரு ஹீரோவான தினேஷ் பாதிக்கப்படறாரு. அவரை நகுல் எப்படி காப்பாத்தறாருங்கறதுதான் படத்தோட கதை.

தினேஷுக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறாங்க. நகுல் ஜோடியா கொல்கத்தாவைச் சேர்ந்த புதுமுகம் ஐஸ்வர்யா நடிக்கிறாங்க. படத்துல காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் எல்லாமே இருக்கு. வழக்கமான கமர்ஷியல் படமா இல்லாம ஒரு புது கோணத்துல படத்தை எடுத்திருக்கோம்.

எந்த ஆங்கிலப் படத்தோட பாதிப்போ, நிஜமா நடந்த சம்பவத்தைப் பார்த்தோ இந்த படத்தை எடுக்கலை. ஆனால், இந்த மாதிரி ஒரு பாதிப்பு கண்டிப்பா நடக்கும்.

வழக்கமான தமிழ் சினிமா படம் மாதிரி இருக்காம, நிஜமாவே ஒரு ஹாலிவுட் படம் பார்க்கிற மாதிரி இருக்கும்,” என்கிறார் இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா.

ஜுன் மாதத்தில் இசை வெளியீடும், ஜுலையில் திரை வெளியீடும் நடைபெற உள்ளது.

 

Read Previous

சிவகார்த்திகேயனுடன் பிரச்சனையா ? சந்தானம் சறுக்கலான பதில்…

Read Next

பாலா மாதிரி படம் எடுக்கணும்…ஒரு பெண் இயக்குனரின் ஆசை…