‘நான்தான் பாலா’ – வேற மாதிரி வரும் விவேக்…

naanthan bala vivekவிவேக் திரையுலகிற்கு வந்து ஏறக்குறைய 20 வருடங்களுக்கு மேல் ஆனாலும், கதாநாயகன் அவதாரம் எடுப்பதற்கு இப்போதுதான் காலம் கனிந்து வந்திருக்கிறது.

அவர் நாயகனாக நடித்துள்ள ‘நான்தான் பாலா’ படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. கண்ணன் இயக்கத்தில் வெங்கட் கிரிஷி இசையமைப்பில், விவேக், ஸ்வேதா, வெங்கட் ராஜு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் அமைதியான, பக்திமயமான ‘பாலா’ கதாபாத்திரத்தில் மட்டும்தான் விவேக்கை பார்க்க முடியுமாம். மறந்தும் கூட அவர் காமெடி செய்யாமல் விட்டிருக்கிறார். சிரிக்க வைக்கும் கடமையை அவரது உதவியாளர் செல் முருகன், மயில்சாமி எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

‘துளசி தீர்த்தமா அல்லது தெறிக்கும் ரத்தமா’ என படத்தைப் பற்றிப் பேசும் போது சீரியசாகவே ஆரம்பித்தார் விவேக்.

தனது பெற்றோரைப் பார்த்துக் கொண்டு, கடவுளுக்கு சேவை ஆற்றுவதையை முழு நேரமும் செய்து கொண்டிருக்கும் ஒருவன் கடைசியில் என்ன செய்கிறான் என்பதுதான் படத்தின் கதை. அது என்னங்கறது சஸ்பென்சா இருந்தால்தான் இப்ப நல்லா இருக்கும் என அந்த கடைசி மாற்றத்தைப் பற்றிச் சொல்ல மறுக்கிறார் விவேக்.

“வழக்கமான கமர்ஷியல் சினிமாக்களிலிருந்து நிச்சயம் இந்த படம் மாறுபட்டிருக்கும். ஒரு பிராமணராக இந்த படத்தில் நடிக்கிறேன். நான் இதுவரை எத்தனையோ படங்களில் பிராமணராக நடித்திருந்தாலும், அவையெல்லாம் காமெடி கலந்த கதாபாத்திரங்கள். ஆனால், இந்த படத்தில் அப்படியில்லை. இந்த கதாபாத்திரத்துக்கு நான்தான் பொருத்தமா இருப்பன்னு இயக்குனர் பாலா தான் இந்த படத்தோட இயக்குனர் கண்ணன்கிட்ட சொல்லியிருக்காரு. அப்புறம்தான் அவர் வந்து நடிக்கக் கேட்டாரு.

பிராமணரா நடிக்கிறதால, எப்படி இருந்த விவேக் இப்படி ஆகிட்டான்னு யாரும் சொல்ல வேண்டாம். நான் என்னைக்குமே கடவுள் இல்லைன்னு சொன்னதில்லை. கடவுள் பேரை சொல்லி மக்களை ஏமாத்தறதைதான் கண்டிச்சிருக்கேன். இந்த படத்தோட கதாபாத்திரத்துக்கு பிராமணரா இருக்கிறது பொருத்தமா இருக்கும். அதனாலதான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை இயக்குனர் உருவாக்கியிருக்காரு, ” என்கிறார் விவேக்.

மற்ற காமெடி நடிகர்கள் மாதிரி இல்லாம, லேட்டா ஹீரோவா வந்தாலும் ‘டேஸ்ட்டான’ ஹீரோவா விவேக் வருவாருன்னு எதிர்பார்க்கலாம்.

 

Read Previous

சமந்தா – பிரணீதா : தெலுங்கில் புதிய நட்பு ஜோடி…

Read Next

‘ஆயிரத்தில் ஒருவன்’ 2ம் பாகம்…செல்வராகவன் தயாராகிறார்…