‘கோச்சடையான்’ – ‘மஞ்சப் பை’ ஒப்பீடு…ரஜினி ரசிகர்கள் கோபம்…

manja pai newsவிமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘மஞ்சப் பை’. இந்த படம் ‘கோச்சடையான்’ படத்தின் முதல் நாள் வசூலில் 70 சதவீத அளவுக்கு வசூல் செய்துள்ளதாக வந்த செய்தியைப் பார்த்து ரஜினி ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

இது சம்பந்தமாக அவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கோபத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இன்னும் பெரிதாக ஒரு வெற்றியைக் கூடக் கொடுக்காத விமல் நடித்து வெளியான ஒரு படத்திற்கு ரஜினிகாந்த் படத்தின் வசூலை உதாரணமாகக் காட்டியிருப்பதை அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

இன்னும் சொல்லப் போனல் ‘மஞ்சப் பை’ படத்தில் விமல் பெயருக்குத்தான் நடித்திருக்கிறார். ஆனால், முழு படத்தையும் ராஜ்கிரண்தான் சுமக்கிறார். அவரது நடிப்பால்தான் படத்திற்கு ஓரளவாவது கூட்டம் வருகிறது என்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் மிகப் பெரும் சாதனைகளை புரிந்துள்ள ரஜினி படத்தோடு விமல் படத்தை ஒப்பிட்டு எப்படி செய்தி வெளியானது என அவர்கள் கேள்விகள் கேட்கிறார்கள்.

‘இனம்’ படத்தின் மூலமாக தமிழர்கள் மனதைப் புண்படுத்திய லிங்குசாமி அன்ட் கோ, ரஜினி பெயரை வைத்து பணம் சம்பாதிக்க முயல்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

 

Read Previous

லட்சுமி மேனனும் பாட வந்துட்டாருங்கோ…..

Read Next

சூர்யா – வெங்கட் பிரபு இணையும் ‘பூச்சாண்டி’…