லட்சுமி மேனனும் பாட வந்துட்டாருங்கோ…..

lakshmi menon d imman kannanமலையாள நடிகைகள் தமிழ்த் திரையுலகை ஆக்கிரமித்தது போதாதென, தற்போது பின்னணி பாடகியாக மாறி, இங்குள்ள பாடகிகளுக்கும் போட்டியாக மாற ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கெனவே, விஷால், லட்சுமி மேனன் நடித்த ‘பாண்டிய நாடு’ படத்தில் இமான் இசையமைப்பில் நடிகை ரம்யா நம்பீசன் பாடிய ‘ஃபை ஃபை’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அந்த பாடலின் வெற்றிக்கு லட்சுமி மேனனின் அதிரடியான நடனமும் ஒரு காரணம்.

தற்போது, லட்சமி மேனனே பாடகியாகவும் மாறிவிட்டார். கண்ணன் இயக்கத்தில் விமல், பிரியா ஆனந்த் நடித்து வரும் படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’.  இந்த படத்திற்காக இமான் இசைமைப்பில் ஒரு பாடலைப் பாடி பாடகியாகவு அறிமுகமாகிறார் லட்சுமி மேனன். இந்தப் பாடலை பிரபல பத்திரிகையாளர் ஏக்நாத் எழுதியுள்ளார்.

லட்சுமி மேனன், இன்னும் என்னென்ன திறமையெல்லாம் மறைச்சி வச்சிருக்காங்க தெரியலையே…

Read Previous

தனுஷ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி…

Read Next

‘கோச்சடையான்’ – ‘மஞ்சப் பை’ ஒப்பீடு…ரஜினி ரசிகர்கள் கோபம்…

Most Popular