நாளை முதல் ‘சரபம்’…

Sarabham_00007‘சரபம்’ என்பது புராண விலங்குகளில் ஒன்று. பாதி உடல் பறவையாகவும், மீதி உடல் சிங்கமாகவும் இருக்கும். அன்பு கொண்டநெஞ்சத்துடனும், அதே நேரம் ஆக்ரோசமான உணர்வுடனும் இருப்பதுதான் இந்த மிருகத்தின் தனித்தன்மை.

‘சரபம்’ படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அந்த மிருகத்தின் மனோபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிர்ப்பாராத விதமாக நடக்கும் ஒரு பிரச்சனை படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை இணைக்கிறது, பிறகு அவர்களுக்குள் நடப்பது என்ன?, என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் கொண்டு சொல்லும் படமே “சரபம்”.

இப்படத்தின் இயக்குனர் அருண்மோகன், பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான அனுமோகனின் மகன். பிரபல இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனனிடம் வாரணம்ஆயிரம் மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற படங்களில் உதவி இயக்குனராக பண்புரிந்தவர்.

பிரபல தெலுங்கு நடிகரான நவின்சந்திரா இப்படத்தின் கதாநாயகனாகவும் புதுமுகம் சலோனி லுத்ரா படத்தின் நாயகியாகவும் நடிக்கின்றார். “ஆடுகளம்” நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவை கிருஷ்ணன் வசந்தும், இசையை பிரிட்டோ மைக்கேலும் மேற்கொள்கின்றனர். படத்திற்கு படத்தொகுப்பு ஜான்பால்
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக சி.வி.குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

நாளை முதல் பறவையின் மென்மையான சிறகோடும், சிங்கத்தின் ஆக்ரோஷமான கர்ஜனையோடும் ‘சரபம்’ வெள்ளித்திரைக்கு வரவுள்ளது. உலகமெங்கும் இப்படத்தை ட்ரிம் ஃபேக்டரி நிறுவனம் விநியோகம் செய்கிறது.

Read Previous

என் யதார்த்த கதைகளுக்கு புதுமுகங்கள்தான் சரி… – ‘கயல்’ பிரபு சாலமன்

Read Next

இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்