‘அஞ்சான்’ – 2 மணி நேரம் 50 நிமிடம்…

Anjaan 2407_00012லிங்குசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சூர்யா, சமந்தா, வித்யுத் ஜமால், சூரி மற்றும் பலர் நடித்துள்ள ‘அஞ்சான்’ திரைப்படத்தின் சென்சார் கடந்த வாரம் நடந்தது. படத்திற்கு அனைவரும் பார்க்கும்படியான ‘யு’ சர்டிபிகேட்டையும் வழங்கினார்கள்.

தற்போது படத்தின் நீளம் எவ்வளவு என்பதை அறிவித்திருக்கிறார்கள். மொத்தம் 2 மணி நேரம் 50 நிமிடம்   ஓடும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதெல்லாம் சராசரியாக 2 மணி நேரம் மட்டுமே ஓடும் வகையில்தான படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் வெளியான ‘ஜிகர்தண்டா’ படத்தின் மொத்த நீளமும் 170 நிமிடங்கள்தான். இந்த ஆண்டில் வெளிவந்த மற்றுமொரு படமான  ‘ராமானுஜன்’ படத்தின் நீளம் 169 நிமிடங்களாக இருந்தது. இந்தப் படங்களின் வரிசையில் தற்போது ‘அஞ்சான்’ படமும் இணைந்து விட்டது.

ஏற்கெனவே ‘ஜிகர்தண்டா’ படத்தின் நீளம் அதிகம் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில், ‘அஞ்சான்’ படத்தின் நீளத்தை தற்போதே குறைப்பார்களா, அல்லது வெளிவந்த பின் கிடைக்கும் ரிப்போர்ட்டை வைத்து குறைப்பார்களா என்பது தெரியவில்லை.

படம் நன்றாக இருந்தால் நீளம் ஒரு பிரச்சனையே இல்லை…

Read Previous

ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் இயக்கும் படம்…

Read Next

இந்தியில் அறிமுகமாகும் யுவன்ஷங்கர் ராஜா…