வழியில் முட்களை போடதீங்க… – சூர்யா வேண்டுகோள்…

anjaan press show‘அஞ்சான்’ படம் கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்து வியாபார ரீதியாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், சமூக வலைத்தளங்களில் சிலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அது சினிமாவுக்கு நல்லதல்ல என சூர்யா வருத்தத்துடன் அவரது கவலையைப் பகிர்ந்து கொண்டார்.

நேற்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் காட்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,

‘அஞ்சான்’ படம் வந்து ஒரு ஐந்து பேருக்கு மட்டும் பண்ற விருந்து கிடையாது. எல்லாருக்கும் பண்ற பெரிய விருந்து இந்தப் படம். எல்லாருக்கும் என்ன பிடிக்கணும்னு மட்டும்தான் பார்த்து கொடுக்க முடியும், ஒரு சிலருக்கு மட்டும் பிடிச்ச மாதிரிலாம் கொடுக்க முடியாது.

வித்தியாசமான படம் பண்றோம், திரையுலகத்தைப் புரட்டிப் போடற படம் பண்றம்னுலாம் இந்தப் படத்தைப் பண்ணலை. யங்கான ஒரு என்டர்டெய்னரான படம் பண்ணலாம்னு பண்ண படம்தான் இது.

படத்தைப் பத்தி நெறைய நெகட்டிவிட்டி கிளம்பி இருக்கு. அது என் படத்துக்கு மட்டும் வர்றதில்லை, பொதுவாவே டிவிட்டர்லயும், பேஸ்புக்லயும் இதை மாதிரி போயிட்டிருக்கு. அதை நான் விரும்பலை, அதை தவிர்க்கலாம்னு நினைக்கிறேன். தேவையில்லாம, ஹெல்த்தியா இல்லாம இருக்கு.

நான் செலக்ட் பண்ணி படம் பண்ணிட்டு வர்றேன், நான் இந்த அளவுக்கு வந்திருக்கன்னா, அதை பத்திரிகைக்காரங்க நல்லது கெட்டது சொல்லி, ஒரு வேலி போட்டுதான் இந்த இடத்தை காமிச்சிருக்கீங்க. ஆனால், போற தடம்லாம் முள்ளை போடாதீங்க,  இப்படி ஒரு நெகட்டிவிட்டி இருக்க வேண்டாம்கறதுதான் எனக்கு ஆசை,” என வருத்தத்துடன் தனது உணர்வை பகிர்ந்து கொண்டார் சூர்யா.

இந்த படத்தைப் பற்றி படம் திரையிடுவதற்கு முன்பே ‘சூது கவ்வும்’ பட இயக்குனர் நலன் குமாரசாமி பதிவிட்ட நெகட்டிவ்வான கருத்தைப் பற்றி பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு அது சம்பந்தமாக அவர் என்னிடம் பேசிவிட்டார் என சூர்யா தெரிவித்தார்.

இன்றைய குறும்பட இயக்குனர்கள் பலர் மற்ற திரைப்படங்களையும், சீனியர் இயக்குனர்கள், நடிகர்கள் பலரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வருவது திரையுலகத்தைச் சேர்ந்த பலரைக்  கோபப்பட வைத்துள்ளது.

சமீபத்தில் வெளிவந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் கூட தம்பி ராமையா பேசுவது போல ‘குறும்படம் இயக்குற குரங்குகளா’ என்ற வசனத்தை வைக்கும் அளவிற்கு அவர்கள் மீதான வெறுப்பு வளர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Read Previous

திருடன் போலீஸ் – செப்டம்பர் மாதம் ரிலீஸ்…

Read Next

‘கத்தி’ பாடல்கள் செப்டம்பரில்வெளியீடு…

Most Popular