ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் ‘கத்தி’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் படத்திற்கு அனிருத் இசையைமக்கும் முதல் படம் இது.
கடந்த சில படங்களாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையயை மட்டும் பயன்படுத்தி வந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முதன் முறையாக அனிருத்திற்கு அவருடைய படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு தந்துள்ளார்.
இன்றைய இளைஞர்கள் விரும்பும் இசையமைப்பாளராக அனிருத் இருந்தாலும் அவர் தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கு மட்டும் இசையமைத்துதான் இந்த அளவிற்கு புகழ் பெற்றுள்ளார். விஜய் நடிக்கும் படத்திற்கு முதன் முறையாக இசையமைப்பதால் இன்னும் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அவர் கொண்டு போய் சேர்க்கப்படுவார்.
இதனிடையே ‘கத்தி’ படப் பாடல்கள் உருவானது பற்றி சில சர்ச்சைகள் எழுந்தாலும் அனிருத் அனைத்துப் பாடல்களுக்கும் இசையமைத்துக் கொடுத்துவிட்டாராம்.
வரும் செப்டம்பர் மாதம் மத்தியில் ‘கத்தி’ படத்தின் பாடல்கள் வெளியாகும் என அனிருத்தே தகவலை வெளியிட்டிருக்கிறார்.