கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘ரங்கூன்’…

gowtham karthikஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் நிறுவனமான ஏ.ஆர்.எம் புரொடக்ஷன்ஸ் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து ‘ரங்கூன்’ என்ற புதிய படம் ஒன்றைத் தயாரிக்க உள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸிடம் பல படங்களுக்கு இணை இயக்குனராகப் பணியாற்றிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்க கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார்.

‘ரங்கூன்’ படத்தைப் பற்றி கௌதம் கார்த்திக் கூறியதாவது, “ஃபாக்ஸ் ஸ்டார், ஏ .ஆர்.முருகதாஸ் ஆகியோருடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பெருமையாகும். இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி தன்னுடைய கதை சொல்லும் நேர்த்தியாலும் , தனக்குத் தேவையானதை கிடைக்கும் வரை தளர்வடையாத குணத்தாலும் என்னை மிகவும் கவர்ந்து உள்ளார். அனிருத்தின் இசையில் நடிப்பது என்னை மேலும் உற்சாகமூட்டுகிறது’ என்றார் .

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறுகையில் “இது இளைஞர்களைப் பற்றிய இளைஞர்களுக்கான படம். என்னுடைய அபிப்ராயத்தில் கௌதம் கார்த்திக் இன்றைய இளைஞர்களின் பிரதிநிதியாவார். அவரது உற்சாகமும், வேகமும் படத்துக்கு உயிர் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பெயரை உச்சரித்தாலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும் இசை அமைப்பாளர் அனிருத்தின் இசை அமைப்பில், ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் ரம்மியமான ஒளிப்பதிவில் நாங்கள் இணைந்து செயல்படும் ‘ரங்கூன்’ நிச்சயம் பேசப்படும் படமாக இருக்கும்.

ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மூலமும், முருகதாஸ் சாரின் மூலமாகவும் அறிமுகமாவது எனக்கு மிகப் பெரிய பெருமை ஆகும். அக்டோபர் மாதம் துவங்க உள்ள ‘ ரங்கூன்’ படத்தின் கதாநாயகி தேர்வு நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. எல்லா தரப்பு மக்களையும் ‘ரங்கூன்’ கவரும் என்பதில் சந்தேகமில்லை,” என்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.

Read Previous

அணையை அசுத்தப்படுத்திய ‘லிங்கா’ குழுவினர்…

Read Next

இந்திய – ஜப்பான் தயாரிப்பில் ‘ஜம்போ 3D’…