‘திலகர்’ பட விழா…ஒரே மேடையில் 5 நடிகைகள்…

Thilagar Audio Launch Newsஒரு படத்தின் இசை விழா, பத்திரிகையாளர் சந்திப்பு ஆகியவற்றிற்கு அந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கும் நடிகைகளை பெரும்பாலும் வருவதில்லை. ஆனால், நேற்று நடந்த ‘திலகர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அப்படத்தின் நாயகி மிருதுளா பாஸ்கர், படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள நீது சந்திரா, மற்றும் நடிகைகள் இனியா, சஞ்சிதா ஷெட்டி, நமீதா உட்பட 5 நடிகைகள் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் இப்படி 5 நடிகைகள் கலந்து கொண்டது இதுவே முதல் முறையாக இருக்கும். யாரை புகைப்படம் எடுப்பது என புகைப்படக் கலைஞர்கள் தவித்த நிலையையும் நேற்று பார்க்க முடிந்தது.

பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக நாயகன் துருவா நடிக்கும் படம் ‘திலகர்’.உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஜி.பெருமாள் பிள்ளை இயக்கியுள்ள படம் இது. ராஜேஷ்யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணன் இசையமைத்துள்ளார். மதியழகன், நாசே ஆர். ராஜேஷ் மற்றும் ரம்யா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் கிஷோர், துருவா, மிருதுளா பாஸ்கர், அனுமோள், ராஜேஷ் யாதவ், மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் அமீர், கரு.பழனியப்பன், சமுத்திரக்கனி, சீனு ராமசாமி, தயாரிப்பாளர் எஸ். தாணு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆடியோவை அமீர் வெளியிட விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார். ட்ரெய்லரை தயாரிப்பாளர் சங்கத்தைச்சேர்ந்த டி.சிவா வெளியிட நடிகர்கள் ஸ்ரீகாந்த்,  விஜய் சேதுபதி,, கிஷோர்,ஆதி,’பூ’ ராமு,  நாயகன் துருவா, நடிகைகள் நாயகி மிருதுளா பாஸ்கர், நமீதா, நீதுசந்திரா, சஞ்சிதா ஷெட்டி, இனியா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில்  நடிகர்கள்  கிஷோர், ‘பூ’ ராமு,   நடிகைகள் இனியா,ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ், இசையமைப்பாளர் கண்ணன், தயாரிப்பாளர்கள் டி.சிவா, சுரேஷ்காமாட்சி, பாடலாசிரியர்கள் அண்ணாமலை, சாரதி ஆகியோரும் பேசினார்கள். முன்னதாக இயக்குநர் ஜி.பெருமாள் பிள்ளை அனைவரையும் வரவேற்றார். நிறைவாக தயாரிப்பாளர்  மதியழகன் நன்றி கூறினார்.

 

Read Previous

ரஜினியை நேசிக்கும் ஜப்பான் ரசிகர்…வீடியோ இணைப்புடன்…

Read Next

ராகவா லாரன்ஸ்-ன் ‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா’…