‘உத்தம வில்லன்’ – வசனம் எழுதிய கமல்ஹாசன்…

kamalhaasan in uttama villain‘உத்தம வில்லன்’ படத்திற்கு வசனம் எழுதுவது யார் என்று ஆரம்பத்திலிருந்தே வெளியிடப்படாமலே இருந்தது. கமல்ஹாசன் படத்திற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார் என்று செய்திகள் வெளியாகின.

ஆனால், கிரேஸி மோகன் படத்திற்காக விவாதத்திலும், ஆலோசனையிலும் மட்டும் ஈடுபட்டிருக்கிறார். படத்தின் கதையை கமல்ஹாசனே எழுதியிருப்பதால் வசனத்தையும் அவரே எழுதிவிட்டாராம். இது பற்றிய தகவலை படத்தின் இயக்குனரான ரமேஷ் அரவிந்தே வெளியிட்டிருக்கிறார்.

ஒரு சீரியஸ் படம், ஒரு கமர்ஷியல் படம் என கொடுப்பதுதான் கமல்ஹாசனின் வழக்கம். அந்த விதத்தில் ‘விஸ்வரூபம்’ படத்திற்குப் பிறகு  நகைச்சுவை அதிகம் கலந்த படமான ‘உத்தம வில்லன்’ வெளியாக உள்ளது.

தமிழில் சில படங்களில் நடித்தவரும், கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராகவும் உள்ள ரமேஷ் அரவிந்த் ‘உத்தம வில்லன்’ படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

தீபாவளி முடிந்ததும், கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.

Read Previous

இன்றைய ரிலீஸ் – 6 படங்கள்…

Read Next

‘ஐ’ இசை வெளியீடு – ஆர்னால்ட் வருகை வீடியோ அறிவிப்பு…