உதயநிதி, எமி ஜாக்சன் நடிக்கும் ‘கெத்து’….

udhayanidhi-amy-jacksonசிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த ‘மான் கராத்தே’ வெற்றிப் படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்து உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் முதன் முறையாக இணைந்து நடிக்கும் ‘கெத்து’ என்ற படத்தை இயக்க உள்ளார்.

இமான் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தைப் பற்றி உதயநிதி ஸ்டாலின் அவருடைய ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளார்.

உதயநிதி தற்போது ஜெகதீஷ் இயக்கத்தில் ‘நண்பேன்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கிய அகமது இயக்கத்தில் ‘இதயம் முரளி’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இவற்றோடு  ‘கெத்து’ படத்தையும் ஆரம்பிக்க உள்ளார். ‘மதராசபட்டிணம், தாண்டவம்’ ஆகிய படங்களில் நடித்தவரும் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள ‘ஐ’ படத்தின் நாயகியுமான எமி ஜாக்சன் உதயநிதி ஜோடியாக நடிக்கிறார். எமி சூர்யாவுடன் ‘மாஸ்’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கெத்து’ படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில்…

Read Previous

பொறியாளன் – விமர்சனம்

Read Next

‘கத்தி’ இசை 18ம் தேதி முதல்…