அழ வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் – டி.ஆர். குற்றச்சாட்டு

Kalkandu - Audio Launch_00012‘ராட்டினம்’ படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் பட நிறுவனம் அடுத்ததாக மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ‘கல்கண்டு’. நந்தகுமார் இயக்கத்தில் கண்ணன் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக டிம்பிள் சோப்டே நடிக்கிறார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டி.ராஜேந்தர் பேசியதாவது, “நகைச்சுவை நடிகர்கள் மக்களை மட்டும் சிரிக்க வைக்க கூடாது, அவரை வைத்துப் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களையும் சிரிக்க வைக்க வேண்டும்.
சில நகைச்சுவை நடிகர்கள் கோடிக் கணக்கில் சம்பளம் கேட்கிறார்கள். அது நியாயமா, நான் 1500 ரூபாய் கொடுத்த நகைச்சுவை நடிகர் ஒருவர் இன்று கோடிக்கணக்கில் கேட்கிறாராம். நான் அவர் பின்னால் போனதில்லை. அந்தக் காலத்தில் ஒரு மணிநேரம் ஒன்றரை மணிநேரம் ஒரு படத்தில் நடித்தே அந்த தயாரிப்பாளரையும் மக்களையும் சிரிக்க வைத்தவர்கள், இன்று தயாரிப்பாளரை அழ வைத்து மக்களை சிரிக்க வைக்கிறார்கள்,” என்கிறார் டி.ராஜேந்தர்.

விழாவில் இயக்குனர்கள் எஸ்.பி முத்துராமன், பாக்யராஜ், கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் செந்தில், மனோபாலா, மயில்சாமி, கஞ்சா கருப்பு, ரஞ்சனி, ஜெனிபர், இயக்குனர் தங்கசாமி, ஆனந்த் பாபு, படத்தின் நாயகன் கஜேஷ், நாயகி டிம்பிள், இசையமைப்பாளர் கண்ணன், பாடலாசிரியர்கள் மதன்கார்க்கி, அண்ணாமலை, மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

Read Previous

இன்றைய ரிலீஸ் – 6 படங்கள்…

Read Next

ஆடாம ஜெயிச்சோமடா – விமர்சனம்