இன்று செப்டம்பர் 19, 2014 – வெளியாகியுள்ள படங்களைப் பற்றிய சிறு விவரம்…
அரண்மனை
விஷன் ஐ மீடியாஸ் தயாரிப்பில் சுந்தர் .சி இயக்கத்தில் பரத்வாஜ், கார்த்திக் ராஜா இசையமைப்பில் சுந்தர் .சி, வினய், ஹன்சிகா, ராய் லட்சுமி, ஆன்ட்ரியா, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆடாம ஜெயிச்சோமடா
அப்ஷாட் பிலிம்ஸ், ஸ்கை லைட் கிரியேஷன்ஸ், பி ஆன்ட் சி பிலிம்ஸ் தயாரிப்பில் பத்ரி இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையமைப்பில் கருணாகரன், பாபி சிம்ஹா, விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆள்
சௌந்தர்யன் பிக்சர்ஸ் ஆனந்த் கிருஷ்ணா இயக்கத்தில் ஜோஹன் இசையமைப்பில் விதார்த், ஹார்த்திகா ஷெட்டி, விடியல் ராஜு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
மைந்தன்
சிகே பிலிம்ஸ் தயாரிப்பில் சி.குமரேசன் இயக்கத்தில் மான்ஷேர் சிங் – ராபிட் மேக் இசையமைப்பில் சி.குமரேசன், ‘புன்னகைப் பூ’ கீதா, ஷைகா நாயர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ரெட்ட வாலு
ப்ரணவ் புரொடக்ஷன் தயாரிப்பில் தேசிகா இயக்கத்தில் செல்வகணேஷ் இசையமைப்பில் அகில், சரண்யா நாக், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
தமிழ்செல்வனும் கலைச் செல்வியும்
மயில் மாஸ் மீடியா தயாரிப்பில் பி.பாண்டியன் இயக்கத்தில் சந்திரா பார்ஸ் இசையமைப்பில் ராஜேஷ், கலை அனாமிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.





