100வது நாளில் ‘வேலையில்லா பட்டதாரி’…

vip 100th day newsதனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா மற்றும் பலர் நடித்து வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் இன்று 100வது நாளைக் கொண்டாடுகிறது.

பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய வேல்ராஜ் முதன் முறையாக இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே இதற்கு முன் ஒரு சில தோல்விகளைச் சந்தித்த தனுஷுக்கு ஒரு வெற்றிகரமான திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இப்படம் தெலுங்கில் ‘ரகுராம் பி.இ.’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளதும், விரைவில் ஹிந்தியிலும் ரீமேக் ஆக உள்ளதும் இந்தப் படத்தின் வெற்றிக்குக் கிடைத்த சான்று.

தனுஷை ரசிகர்கள் எப்படி பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அதற்கேற்றபடி தனுஷும் இந்தப் படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். தனுஷ் நடித்து வெளிவந்த 25வது படம் ‘வேலையில்லா பட்டதாரி’, அவருக்கு இரு மடங்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

சமுத்திரக்கனி, சரண்யா ஆகியோரின் குணச்சித்திர நடிப்பும், இடைவேளைக்குப் பின்னர் வந்தாலும் விவேக்கின்  நகைச்சுவையும் படத்திற்கு பக்கபலமாகவே அமைந்தன.

இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் மீண்டும் ஒரு வெற்றியைச் சுவைத்துள்ளது.

இந்த வருடம் ஜுலை 18ம் தேதி வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படம்தான் இந்த ஆண்டின் ‘உண்மையான’ 100வது நாள் வெற்றிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

‘கத்தி’ – முதல் நாள் வசூல் 23.8 கோடி…

Read Next

‘கத்தி’ வசூல் 23.80 கோடி இல்லை…25.95 கோடி…

Most Popular