இன்று நவம்பர் 14, 2001 – வெள்ளிக் கிழமை – வெளிவரும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
திருடன் போலீஸ்
கேபிட்டல் பிலிம் வொர்க்ஸ், கெனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் ராஜு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் ‘அட்டகத்தி’ தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அப்புச்சி கிராமம்
ஐ கேட்ச் மல்டி மீடியா தயாரிப்பில் வி.ஆனந்த் இயக்கத்தில் விஷால் .சி இசையமைப்பில் பிரவீண் குமார், அனுஷா, பிரகாஷ், பழனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
முருகாற்றுப்படை
சிகரம் விஷுவல் மீடியா தயாரிப்பில் கே.முருகானந்தம் இயக்கத்தில் சரவணன், நவீக்கா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
விலாசம்
ஸ்ரீ சனா பிலிம்ஸ் தயாரிப்பில் பா.ராஜகணேசன் இயக்கத்தில் ரவி ராகவ் இசையமைத்துள்ள படம். பவன், சனம் ஷெட்டி, அருள்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஞானக் கிறுக்கன்
தங்கம்மாள் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இளையதேவன் இயக்கத்தில் தாஜ்நூர் இசையமைத்திருக்கும் படம். டேனியல் பாலாஜி, ஜெகா, அர்ச்சனா கவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
புலிப் பார்வை
வேந்தர் புரொடக்ஷசன்ஸ் தயாரிப்பில் பிரவீண் காந்தி இயக்கம், இசையமைப்பில் சத்யதேவ், மதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அன்பென்றாலே அம்மா
எம்கேஎஸ் மூவீஸ் தயாரிப்பில் எம்.கே.எஸ். கருப்பசாமி இயக்கியிருக்கும் படம்.






