டி.எஸ்.பி. பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘சூதனம்’. சென்னையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது.
மூன்று பெண்களுக்கு வரும் தவறான போன் அழைப்பால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் சுகன்.
கிரைம் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் துளசி, பிரகாஷ், கடம் கிஷன், ஜீவா ரவி, கார்த்தி, நந்தா, பிரியா, சிந்து, லொள்ளு சபா பழனியப்பன், ஆனந்த் ஆகியோருடன் வில்லனாக பிரதீப் அறிமுகமாகிறார்.
குட்லக் ரவி, பரமேஷ், பத்ரி ஆகியோர் இணைந்து இசையமைக்க சுதந்திரதாஸ், சாய் பிரகாஷ், கானா சத்யா ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அபிராமி ராமநாதன் தலைமை தாங்க, வி.சி.குகநாதன் முன்னிலை வகிக்க, கலைப்புலி எஸ்.தாணு, ஜாக்குவார் தங்கம், விஜயமுரளி ஆகியோர் இசைத்தட்டை வெளியிட நடிகர்கள் ஜீவா ரவி, பரத் கல்யாண், மகேந்திரன் மற்றும் பலர் பெற்றுக் கொண்டனர்.
படத்தின் இயக்குனர் சுகன் அனைவரையும் வரவேற்றுப் பேச, லொள்ளு சபா மகேந்திரன் நன்றியுரை ஆற்றினார். படத்தின் மக்கள் தொடர்பாளர் பெரு.துளசி பழனிவேல் விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றார்.
விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.