திருமணம் பற்றிய செய்தி…த்ரிஷா மறுப்பு…

trisha marriage newsநடிகை த்ரிஷாவுக்கும், பிரபல திரைப்பட தயாரிப்பாளரான வருண் மணியனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என காலை முதலே ஒரு தகவல் திரையுலக வட்டாரங்களிடையே பரவி வந்தது.

அது பற்றி பலரும் செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது என்றெல்லாம் எழுதினார்கள். (நமது இணையதளத்தில் அப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை).

அந்த வதந்தியான செய்திக்கு த்ரிஷா சற்று முன்னர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

“எனக்கு திருமண நிச்சயம் எதுவும் நடக்கவில்லை. அப்படி ஏதாவது நடந்தால், அது பற்றிய தகவல் என்னிடம் இருந்துதான் முதலில் வரும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

த்ரிஷா தற்போது சில தமிழ்ப் படங்களிலும், தெலுங்கிலும் நடித்து வருகிறார். கன்னடப் படங்களிலும் நடிக்க அவருக்கு அதிகமான அழைப்புகள் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அப்படி ஒரு செய்தியை யார் பரப்பியது என்று தெரியவில்லை.

Read Previous

Happy New Year goes to the Oscar Library…

Read Next

மீண்டும் நடிக்க வந்தார் ஜோதிகா…