விரைவில் ‘வெள்ளைக்கார துரை’ இசை…

Vellakkara Durai - Gallery - 2_00019‘தேசிங்கு ராஜா’ வெற்றிப் படத்திற்குப் பிறகு இயக்குனர் எழில் இயக்கி வரும் படம் ‘வெள்ளைக்கார துரை’. இமான் இசையமைப்பில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

‘வெள்ளக்கார துரை’ படத்திற்காக சமீபத்தில் கொடைக்கானலில் விக்ரம்பிரபு – ஸ்ரீதிவ்யா பங்கேற்ற முதலிரவு பாடல் காட்சி ஒன்றை வீடு ஒன்றில் படமாக்கினோம்.

“கூதக் காத்து கொல்லுதடி…கூரச்சேல தாடி” என்ற முதலிரவு பாடல் அது. முதலிரவு பாடல் தான் என்றாலும் விரசமே இல்லாமல் எல்லோரும் குடும்பத்தாருடன் பார்க்கக் கூடிய பாடலாக உருவாக்கி உள்ளோம். நான் இயக்கிய இதற்கு முந்தைய படங்களிலும் ஆபாசமான காட்சிகள் எதுவுமே இருக்காது. அது மாதிரி தான் இந்தப் படமும் இருக்கும்,” என்கிறார் இயக்குனர் எழில்.

தயாரிப்பாளர் அன்பு செழியன் கூறியதாவது, “ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்துள்ள நான் முதன் முதலாக தயாரிக்கும் படம் இது.
நான் எதிர் பார்த்த மாதிரியே தரமான கமர்ஷியல் படமாக வந்திருக்கிறது. படத்தை பார்த்து விட்டேன், முழு திருப்தியாக இருக்கிறது,” என்கிறார்.

விரைவில் இப்படத்தின் இசை வெளியாக உள்ளது.

Read Previous

ஜெய், ஆன்ட்ரியா நடிக்கும் ‘வலியவன்’…

Read Next

‘பாஸ்’ கூட்டணி மீண்டும்…‘பாஸ்’ ஆகுமா…?