பிசாசைக் கண்டு நாம்தான் பயப்படுவோம், அப்படியிருக்க பிசாசு யாரைக் கண்டு பயப்படப்போகிறது. ‘பிசாசு’ படத்திற்கும் யாரைப் பார்த்தும் பயமில்லை என அப்படக் குழுவினர் நிரூபித்துள்ளார்கள்.
டிசம்பர் 12ம் தேதியன்று ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படம் வெளிவர இருப்பதால் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இந்த வாரம் சில படங்களும் இரண்டு வாரங்கள் கிழித்து கிறிஸ்துமஸ் தினத்தன்றும் சில படங்களும் வெளிவர உள்ளன.
ஆனால், பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள் ‘பிசாசு’ படத்தை டிசம்பர் 19ம் தேதியன்று வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா’ வந்தாலும் பரவாயில்லை, தங்களுக்கென தனி திரையரங்குகள் கண்டிப்பாகக் கிடைக்கும். அதை விட்டால் வேறு அதற்கடுத்த வாரங்களில் பல படங்கள் வெளிவர உள்ளன. எனவே 19ம் தேதியிலேயே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக ‘பிசாசு’ பட வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கிறார்கள்.