கால்பந்தாட்டம் பற்றிய ‘ஐவராட்டம்’…

Ivarattam - Gallery_00015சுப.செந்தில் பிக்சர்ஸ் – த வைப்ரண்ட் மூவீஸ் பட நிறுவனங்கள் தயாரிக்கும் படம் ‘ஐவராட்டம்’.

இந்த படத்தில் நிரஜ்ஜன் ஜெயப்பிரகாஷ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் ,அம்ருத் கலாம் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கியக் கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ் நடிக்கிறார். ஒரே படத்தில் அப்பா, மகன்கள் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக நித்யா ஷெட்டி நடிக்கிறார். வில்லனாக C.K. செந்தில்குமார் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, கிங்காங், மனோகர் ராஜபாண்டி, ஆலன், காசி ஆகியோர் நடிக்கிறார்கள்.

மிதுன் மாணிக்கம் இயக்கும் இந்தப் படத்திறற்கு சுவாமிநாதன் இசையமைக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,

“சிவகங்கை மாவட்டத்தில் நடந்த உண்மைக் கதை இது. இன்று இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு நிகராக கால்பந்தாட்டமும் புகழ் பெற்று வருகிறது.  வழக்கமான சினிமாவில் இருந்து விலகி விளையாட்டை மையப்படுத்தி பல படங்கள் தயாராகிக் கொண்டிருகிறது. அதில் நாங்களும் பங்கு கொள்கிறோம் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

அடுத்த தலைமுறை அறிவுபூர்வமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க விளையாட்டும் முக்கியம் என்பதை கமர்ஷியலாக உருவாக்கி உள்ளோம்.

படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இப்படம் வெளியாக உள்ளது,” என்கிறார் இயக்குனர் மிதுன் மாணிக்கம்.

Read Previous

விஜய் – திரையுலகில் 22 வருடம்…சில தகவல்கள்…

Read Next

காட்டின் ரகசியம் சொல்லும் ‘சவரிக்காடு’…