லிங்கா – முதல் நாள் வசூல் 70 கோடியா…?

lingaa collection news‘லிங்கா’ படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளிவந்து ரசிகர்களை எந்த அளவிற்கு திருப்தியளித்திருக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் ‘லிங்கா’ படத்தின் முதல் நாள் வசூல் சுமார் 70 கோடி வந்திருக்கும் என அதிகாரப்பூர்வமற்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் சுமார் 720 திரையரங்குகளில் திரையிடப்பட்ட ‘லிங்கா’ சென்னையைத் தவிர பல ஊர்களில் முதல் நாளில் ரசிகர் மன்றக் காட்சிகள், சிறப்புக் காட்சிகள் என ஒரு நாளைக்கு 5க்கும் மேற்பட்ட காட்சிகளாக திரையிடப்பட்டுள்ளன.

அந்த விதத்தில் அவற்றையெல்லாம் கணக்கிட்டால் இந்திய அளவில் சுமார் 50 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் சுமார் 20 கோடி ரூபாயும், மொத்தமாக 70 கோடி ரூபாய் அளவிற்கு வசூலித்திருக்கும்  என்கிறார்கள்.

சென்னையில் மட்டும் 55 திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தப் படம், பல முக்கிய நகரங்களில் 5 முதல் பத்து திரையரங்குகள் வரை கூட வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் படம் வெளிவந்து மூன்றாவது நாளான இன்றும் பல திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

இந்த வார இறுதிக்குள்ளாகவே படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மேலதிக விவரங்கள் விரைவில்…

 

Read Previous

‘சாஹசம்’ படத்தில் பாடிய மோஹித் சௌஹான்…

Read Next

ஒரே சமயத்தில் நான்கு பட விழா…