ஜீ தமிழ் – அழகிய சிநேகிதியே…நேரம் மாற்றம்…

zee tamil azhagiya senhithi newsஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘அழகிய சிநேகிதியே’ நிகழ்ச்சி நேயர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த வாரம் முதல் மதியம் 2:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது .

சமுதாய நோக்குடன் காலத்திற்கேற்ற தலைசிறந்த நிகழ்ச்சிகளை வழங்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் பெண்ளுக்கான பிரத்யேக நிகழ்ச்சி “அழகிய சினேகிதி”.

நடிகையும், தொலைக்காட்சித் துறை பிரபலமுமான நீலிமா ராணி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பெண்களை ஊக்குவித்து, தொழில் முனைவோராக முன்னேற்றும் நோக்கில், வீட்டுக்கலை, அழகும் ஆரோக்கியமும், பேஷன் உலகம் மற்றும் புதுமைப் பெண்கள் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பயனுள்ள தகவல்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் .

உபயோகமற்ற பொருட்களில் இல்லத்திற்கான கலைப் பொருட்கள் தயாரித்தல், ஆபரணங்கள் வடிவமைத்தல் உள்ளிட்ட கைவினைத் தொழில்களை, தலைசிறந்த தொழில் முனேவோர்கள் இந்நிகழ்ச்சியில் கற்பிக்கின்றனர்.

தொழில் தொடங்குவதற்கான அனைத்து வழிமுறைகளையும் இந்நிகழ்ச்சி விவாதிக்கிறது. அத்துடன் பெண்களின் தாழ்வுமனப்பான்மையை அகற்றி, தன்னம்பிக்கையை உயர்த்தும் பயனுள்ள உரைகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது.

பெண்களின் முன்னேற்றத்தை லட்சியமாகக் கொண்டுள்ள இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 2:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது , காணத்தவறாதிர்கள்.

Read Previous

‘தண்ணில கண்டம்’ தன்னைக் காப்பாற்றும் – தீபக்…

Read Next

பாலச்சந்தர் நலம் பெற கமல் உருக்கமான பேச்சு…