‘வானவில் வாழ்க்கை’ – இசை மயமான படம்…

vanavil vazhkaiஇசையை மையமாகக் கொண்ட படங்கள் என்றாலே ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். பாடல் போட்டி, நடனப் போட்டிகள் ஒரு படத்தில் இருந்தால் அந்தப் படங்கள் வெற்றி பெறும் என்பது வரலாறு.

இவ்வகையில் பல ஆண்டுகள் கழித்து முழுக்க முழக்க இசைக்கான ஒரு படமாக வருகிறது ‘வானவில் வாழ்க்கை’. ‘நினைத்தாலே இனிக்கும்’ ‘பருவ ராகம்’ என இளைஞர்களைக் கவர்ந்த இனிய இசை மயமான படங்களுக்கு அன்று முதல் இன்று வரை வரவேற்பு உத்திரவாதம்.  அத்தகைய ஒரு படம்தான் ‘வானவில் வாழ்க்கை’. மொத்தம் 17 பாடல்கள் அமைந்துள்ள இப்படத்திற்கு, இசையமைத்து இயக்குனராகவும் அறிமுகமாகிறார் ஜேம்ஸ் வசந்தன். இப்படத்தில் வரும் அனைத்துப் பாடல்களையும் படத்தில் நடித்தவர்களே பாடுகிறார்கள்.

“இரண்டு கல்லூரியின் இசைக் குழுக்களுக்கு இடையே நடக்கும் போட்டிதான் கதை. இசைக் குழுக்களில் இருக்கும் நபர்களே படத்தின் பிரதான 11 கதாபாத்திரங்கள். இவர்களே பாடல்களைப் பாடி நடித்திருக்கிறார்கள். கல்லூரி காலத்திலிருந்தே பாடல்கள் நிறைந்த ஒரு மியுசிக்கல் படத்தை இயக்குவதை பெரும் லட்சியமாகக் கொண்டிருந்தேன், கல்லூரி மாணவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.

நடிப்பு, பாடல், இசைக்கருவி வாசித்தல் என பன்முகம் கொண்ட இளமை ததும்பும் 11 கலைஞர்களை 2 ஆண்டுகள் தேடி பிடித்து நடிக்க வைத்துள்ளோம். சிறு, குறு, பெரியது என கதையுடன் ஒன்றிய பொருத்தமான 17 பாடல்களை இசையமைத்தும் இருக்கிறேன். நான் அறிமுகம் செய்யும் இந்த இளைய திறமைகள் நிச்சயம் பெரிய அளவில் வளர்ந்து ஜொலிப்பார்கள். இப்படம் காதலர் தின கொண்டாட்டமாக வெளிவரும்,” என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

Read Previous

‘என் வழி தனி வழி’ பாடல்கள் புதிய முறையில் வெளியீடு…

Read Next

ஐ – புதிய டிரைலர்