வித்தியாசமும் பொழுதுபோக்கும் நிறைந்த நிகழ்ச்சிகளின் மூலம் ஒவ்வொரு பண்டிகையையும் சிறப்புற்றதாக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி வரும் புத்தாண்டு தினத்தன்று விதவிதமான நிகழ்ச்சிகளின் மூலம் நேயர்களை மகிழ்விக்க உள்ளது.
காலை 7:00 மணி
சிறப்பு ஒளிமயமான எதிர்காலம்
2015 வருடத்திற்கான 12 ராசிகளின் பலன்களை திரு. ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் நேயர்களுக்கு விளக்குகிறார். புத்தாண்டை எதிர் நோக்கியுள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியின் மூலம் வரும் வருடத்திற்கான பலன்களை அறிந்துகொள்ளலாம்.
காலை 8:00 மணி
சிறப்பு அற்புதம் தரும் ஆலயங்கள்
இந்நிகழ்ச்சியில் வேலூரில் அமைந்துள்ள தங்ககோவிலின் அழகையும் அற்புதங்களையும் நேயர்கள் அறிந்துகொள்ளலாம். மேலும் இந்நிகழ்ச்சியில் கபாலீஸ்வரர் கோவிலில் ஸ்வாமி கண்ணன் பட்டாசாரியா நடத்திய சிறப்பு யாகத்தின் தொகுப்பு ஒளிபரப்பாக உள்ளது.
காலை 8:30 மணி
கோலிவுட் கொக்கொரக்கோ 2014
இந்நிகழ்ச்சியில் 2014 ம் ஆண்டு தமிழ் திரையுலகத்தில் நடந்த சுவாரசியமான தகவல்களை நேயர்களுக்கு வழங்கவுள்ளது.
காலை 9:30 மணி
வெள்ளக்கார துரை
சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “வெள்ளகார துரை” திரைப்படத்தின் கதாநாயகன் விக்ரம் பிரபு.,கதாநாயகி ஸ்ரீதிவ்யா , சூரி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்குபெறும் ஒரு கலகலப்பான நிகழ்ச்சி.
காலை 11:00 மணி
மதயானைக் கூட்டம் – சிறப்புத் திரைப்படம்
கதிர், ஓவியா நடிப்பில் G.V.பிரகாஷ் தயாரிப்பில் வெளிவந்த இப்படம்,தேனி மாவட்டத்தில் வாழும் குறிப்பிட்ட ஒரு இனத்தவருடைய கோபம், பாசம் என்று அவர்களுடைய வாழ்க்கை முறையை மையமாக வைத்து, மண் மனம் மாறாமல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மதியம் 2:00 மணி
ரம்மி – சிறப்புத் திரைப்படம்
விஜய்சேதுபதி, இனிகோ பிரபாகரன், ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி, சூரி நடிப்பில் கிராமத்தை கதைக் களமாகக் கொண்டு காதலை கதைக் கருவாக கொண்டு வெளி வந்த சிறப்பு திரைப்படம்
மதியம் 5:00 மணி
சலீம் – புத்தாண்டு தின சிறப்புத் திரைப்படம்
2014ம் ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றான விஜய் ஆண்டனியின் ‘சலீம்’ திரைப்படம், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜனவரி 1ம் தேதி மாலை 5:00 மணிக்கு புத்தாண்டு தின சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது. விஜய் ஆண்டனியின் நடிப்பு, இசை மற்றும் தயாரிப்பில் வெளியான இப்படம், அவர் கதாநாயகனாக அறிமுகமான ‘நான்’ படத்தினைப் போன்றே பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.
மனிதாபிமானம் மிக்க மருத்துவர் விஜய் ஆண்டனி, சுயநலமும், பொறாமையும் நிறைந்த மனிதர்களால் உதாசீனப்படுத்தப்பட்டு, ஒரே ஒருநாள் தான் நினைக்கும் வாழ்வை வாழ ஆசைப்படுவதும், அதன்பின் நடைபெறும் விறுவிறுப்பான சம்பவங்களுமே இப்படத்தின் சுவாரசியமான திரைக்கதையாகும்.
அறிமுக இயக்குனர் நிர்மல்குமாரின் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நாயகனாகவும், அக்ஷா பார்தசானி கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படம் புத்தாண்டு தினத்தில் ரசித்து பார்க்க ஏதுவான ஒரு திரைப்படமாகும்.
இரவு 8:00 மணி
போடா போடி
ஆண்களும் பெண்களும் எதிரெதிர் அணியினராக பங்கு பெறும் முற்றிலும் மாறுபட்ட ஒரு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் சவால்களை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவது நேயர்களுக்கு விருந்தாக அமையும்.
இரவு 10:00 மணி
சிறப்பு டாப் 10
2014 ம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளின் தொகுப்பு.
ஜீ தமிழில் புத்தாண்டு சிறப்பு நிகழ்சிகள் அனைத்தையும் பார்த்து புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடுங்கள்…
