‘சாஹசம்’ படத்திற்காகப் பாடிய சிம்பு…

saahasam simbuநடிகர் தியாகராஜன் தயாரிப்பில் அருண்ராஜ் வர்மா இயக்கத்தில் தமன் இசையமைப்பில் பிரசாந்த் நாயகனாக நடிக்கும் ‘சாஹசம்’ படத்திற்காக ‘டேசி டேசி கேர்ள்…’ என்று உற்சாகமான ஒரு பாடல் சிம்பு பாட சமீபத்தில் சென்னையில் பதிவு செய்யப்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக லண்டனில் இருந்த சிம்பு சென்னை விமான நிலையத்தில் இறங்கியதுமே நேராக இசையமைப்பாளர் தமன் ஸ்டுடியோவுக்கு வந்து பாடினார்.

மதன் கார்க்கி எழுதிய ஒரு பாடலை, ஏற்கனவே நடிகை லட்சுமி மேனன் பாடியிருந்தார். தற்போது ‘சாஹசம்’ படத்தில் பிரஷாந்திற்க்காக சிம்பு ஒரு பாடலைப் பாடியுள்ளார். பிரஷாந்த் பாலிவுட் நடிகை நர்கீஸுடன் இணைந்து ஆடும் விசேஷமான ஐட்டம் பாடல் ஏற்கனவே படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது.

தற்போது ‘டேசி கேர்ள்….’ என்ற பாடலைப் பாடியதன் மூலம் இந்தியாவின் சிறந்த பாடகர்கள் பாடியுள்ள ‘சாஹசம்’ படத்தில் சிம்புவும் இணைந்துள்ளார். சிம்பு பாடியதும் இந்த பாட்டு தனி உச்சத்தை எட்டியது என்று மகிழ்ச்சியோடு பிரஷாந்த் சிம்புவைப் பாராட்டினார்.

அனிருத் சமீபத்தில் இந்தப் படத்திற்காக நா.முத்துக்குமார் எழுதிய “யாரிவள்…யாரிவள் என்னாச்சி…’ என்ற பாடலைப் பாடியிருந்தார். மேலும் இந்தப் படத்தில் சங்கர் மகாதேவன். ஸ்ரேயா கோஷல், மோஹித் சவுஹான், ஹனி சிங். அர்ஜித் சிங், ஆன்ட்ரியா ஆகியோரும் பாடியுள்ளனர்.

பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ள ‘சாஹசம்’ படத்தில் ஐந்து பாடல்களுமே அற்புதமாக அமைந்துள்ளது என்று நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான தியாகராஜன், தமனுக்கு டயோட்டா பார்சூனர் காரை ஏற்கெனவே பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார்.

சிம்பு பாடிய பாடலோடு ‘சாஹசம்’ படத்தின் அனைத்துப் பாடல்களின் பதிவும் நிறைவுற்றது. இப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

‘சாஹசம்’ படத்தில் பாடல்களைப் பாடியுள்ள அனிருத், சிம்பு, மோஹித் சவுஹான், ஸ்ரேயா கோஷல், லஷ்மி மேனன், ஆண்ட்ரியா ஆகியோர் மேடையில் தோன்றி படத்தின் பாடல்களை நேரடியாகப் பாட உள்ளார்கள்.

இசைப் பிரியர்களுக்கு இனிமையான இசையாய் அமையவுள்ள ‘சாஹசம்’ படத்தின் பாடல்கள் வெகு விரைவில் வெளிவந்து எதிர்ப்பார்ப்புகளை ஈடு செய்யும் என்று தயாரிப்பாளர் தியாகராஜன் பெருமிதத்தோடு கூறினார்.

Read Previous

ஜீ தமிழ் – 2015 – புத்தாண்டு சிறப்பு நிகழ்சிகள்

Read Next

‘கங்காரு’ பட விழா – தயாரிப்பாளர்களுக்குத் திமிர் வேண்டும் – ஆர்.சுந்தர்ராஜன் பேச்சு…