இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கடந்த ஆண்டு ‘பென்சில்’ திரைப்படம் மூலம் நடிப்புத் துறையிலும் இறங்கினார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானதும், அவருக்கு உடனடியாக ‘டார்லிங்’ படத்திலும் நாயகனாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இப்போது ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்க ஆரம்பித்த முதல் படத்தை முந்திக் கொண்டு இரண்டாவது படமான ‘டார்லிங்’ பொங்கல் அன்று திரைக்கு வருகிறது.
இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘பிரேம கதா சித்திரம்’ படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள படம். சாம் ஆண்டன் இயக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ரானி, சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்கள்.
‘ஐ, ஆம்பள’ படங்களுடன் ‘டார்லிங்’ திரைப்படமும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.