‘ஆம்பள’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்…

aambala newsவிஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் சுந்தர் .சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் ‘ஆம்பள’ திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது.

இப்படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. சுந்தர் .சி இயக்கும் படங்கள் என்றாலே குடும்பத்துடன் பார்க்கும்படியான படமாக இருக்கும்.

இந்தப் படத்தையும் நகைச்சுவை, காதல், ஆக்ஷன் கலந்த ஒரு படமாகத்தான் இயக்கியிருக்கிறார். பிரபு, ரம்யாகிருஷ்ணன், கிரண், சதீஷ், ஐஸ்வர்யா, கிரண், வைபவ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஹிப் ஹாப் தமிழா இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று ‘கத்தி’ படத்துடன், விஷால் அவரது ‘பூஜை’ படத்தைப் போட்டி போட்டு வெளியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த ஆண்டு பொங்கலுக்கும் ‘ஆம்பள’ படத்தை  ‘ஐ’ படத்துடன் போட்டி போட்டு வெளியிடுகிறார்.

 

Read Previous

அஜித்தின் புதிய படம் அடுத்த மாதம் ஆரம்பம்…

Read Next

பொங்கலுக்கு நாயகனாக வருகிறார் ஜி.வி.பிரகாஷ்…