அஜித்தின் புதிய படம் அடுத்த மாதம் ஆரம்பம்…

veeram working stillsஅஜித் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் இந்த மாதம் 29ம் தேதி வெளிவருகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு அஜித் உடனடியாக அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பிக்க உள்ளார்.

அந்தப் படத்தை ‘வீரம்’ படத்தை இயக்கிய சிவா இயக்க உள்ளார். இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பது ரசிகர்களிடையே மிகப் பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹன்சிகா, சமந்தா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் அந்தப் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அவர்களோடு பல புதுமுக நடிகைகளும் கூட அஜித்துடன் நடிக்க மிகவும் ஆவலாக உள்ளார்கள்.

‘என்னை அறிந்தால்’ படம் ஆக்ஷன் படமாக உருவாகி வருவதால் அடுத்த படம் ஆக்ஷன் படமாக இருக்குமா, அல்லது ‘வீரம்’ படம் போலவே குடும்பத்துப் பின்னணியில் இருக்குமா என்பது தெரியவில்லை.

இந்த மாதக் கடைசிக்குள் படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Read Previous

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது…

Read Next

‘ஆம்பள’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்…