ஸ்டுடியோக்களை வியந்து பார்த்தேன் – ஜோஸ் செல்வராஜ்

vanavil vazhkai jose selvarajஇசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைக்கும் திரைப்படம் ‘வானவில் வாழ்க்கை’. இப்படத்தில் நடிப்பில் மட்டுமல்லாது, இசையிலும் திறமை உள்ள இளம் திறமையாளர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ட்ரம்ஸ் கலைஞராக ஜோஸ் செல்வராஜ் நடித்திருக்கிறார். தனது இசைப் பயணத்தையும், நடிப்புக்கான ஆர்வத்தையும் பற்றி அவர் கூறுகையில்,

“கொடைக்கானல் சர்வதேச பள்ளியில் இசை பயின்றேன். சிறு வயது முதலே ட்ரம்ஸ் வாசிக்க ஆரம்பித்தேன். பின், லண்டன் ராயல் ஸ்கூல் ஆஃப் மியுசிக்கில் கிரேட் 5 முடித்துள்ளேன். இந்திய இசைக் கருவி தபலா வாசிக்கவும் கற்றுகொண்டேன்.

இப் படத்தில் பையாஸ் என்ற கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறேன். என்னுடைய நிஜ குணாதிசியங்கள் இப்படத்தின் கதாபாத்திரத்துடன் இயல்பாகவே அமைந்திருந்ததால் நடிப்பதற்கு எனக்கு மிக எளிமையாய் இருந்தது. முதலில், ஜேம்ஸ் சார் என்னை நடிக்கச் சொன்ன பொழுது தயங்கினேன். ஒவ்வொரு காட்சியையும் அவர் நடிக்கச் சொல்லிக் கொடுப்பார். தற்பொழுது நடிப்பின் மேல் அதிக ஆர்வம் வந்துள்ளது. கானா பாடலுக்கு வாசித்த அனுபமும் புதியதாய் இருந்தது.

பாட்டு , ஆட்டம், நடிப்பு மற்றும் இசைக் கருவி வாசித்தல் என முழு அனுபவமும் இனிதாய் அமைந்தது. இப்படத்திற்காக ராமோஜி ஃபிலிம் சிட்டி சென்று இருந்தோம். என் வாழ்வில் முதன் முறையாக ஒரு ஸ்டுடியோ உள்ளே செல்கிறேன். அங்கிருந்த ஷூட்டிங் ஸ்டுடியோக்களைக் கண்டு வியந்து போனேன். இப்படி பல புதிய அனுபவங்களை எங்களுக்கு அளித்தது ‘வானவில் வாழ்க்கை’.

முழுக்க முழுக்க இசையை மையமாகக் கொண்ட ‘மியுசிக்கல் ஃபிலிம்’ இது. பலரது கல்லூரி வாழ்கையை நினைவுக்கு கொண்டு வரும் இப்படம் ஜேம்ஸ் சாரின் கனவு. அக்கனவு நிறைவேற நானும் ஒரு அங்கமாய் இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,” என புன்னகையுடன் கூறுகிறார் ஜோஸ் செல்வராஜ்.

Read Previous

‘பாம்பு சட்டை’ படப்பிடிப்பு ஆரம்பம்…

Read Next

‘பட்ற’ – நண்பனுக்காக தயாரான படம்…